பாதணிகளில் கார்திகைப் பூ: தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்திய நிறுவனம்

#SriLanka #Tamil People
Mayoorikka
1 year ago
பாதணிகளில்  கார்திகைப் பூ: தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்திய நிறுவனம்

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனமொன்று தமிழர்களின் பாரம்பரியமானதும் தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசனின், அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

 யாழ்ப்பாணத்தில், செவ்வாய்க்கிழமை (28) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் பாதணிகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது. 

 குறித்த நிறுவனத்தினால் உற்பத்திச் செய்யப்படும் அந்த பாதணிகளை, பாவனைக்கு விடாது தடை செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!