பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர்

#Death #Accident #Pakistan #Road #family
Prasu
2 years ago
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர்

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் ஜீப்பில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு அனைவரும் ஜீப்பில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4