கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம் : உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக மக்கள் விசனம்!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம் : உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக மக்கள் விசனம்!

கிளிநொச்சி - கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்துள்ளது.  

மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையான காலப் பகுதியில் மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை தினமும் பகுதியாக சென்று காட்டு யானைகள் அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.  

இதன் காரணமாக வீட்டிவிருந்து மாலை 5 மணிக்கு பின்னர் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்ப முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் மக்களை துரத்தி வருவதாகவும், இதன் காரணமாக இரவு வேளைகளில் நித்திரையின்றி காட்டு யானைகளுக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!