நடுவானில் கொந்தளிப்பில் சிக்கிய விமானம் : 12 பேர் படுகாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கத்தாரின் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளின் நோக்கிச் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் கொந்தளிப்பில் சிக்கியதில் 12 பயணிகள் காயமடைந்தனர்.
குறித்த விமானம் டப்ளின் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமான நிலையத்தில் வைத்திய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்துள்ளதுடன், காயமடைந்தவர்களுக்க சிகிச்சையளித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வாரம், லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இதேபோன்ற காற்று கொந்தளிப்பால் தாக்கப்பட்டு, பயணி ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே