யாழ்ப்பாணம் நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago

யாழ் மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் வருடந்தோறும் வெளியீடு செய்யப்படும் "யாழ்ப்பாணம்" நூலுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஈழத்தின் வடபுலம் வரலாற்றின் முன்னும் பின்னும்" என்ற தொனிப்பொருளில் (மொழி, பண்பாடு, கலைகள் முதலான பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கியதான ஆக்கங்கள்) அமைந்த ஆக்கங்களை, 8 பக்கங்களுக்கு மேற்படாமல் A4 தாளில் கணணித் தட்டச்சு செய்து (Font: Baamini, Font size:12) வன், மென் பிரதிகளாக 2024.06.20 திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக.
bookjaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு, அல்லது மாவட்ட செயலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமோ அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.



