நாட்டில் சீரற்ற காலநிலையினால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
#SriLanka
#weather
#Disaster
Mayoorikka
1 year ago

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 45,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் இதுவரையில் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் 12 வீடுகள் முற்றாகவும் 3,166 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக, அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 28,350 பேர் பாதிப்படைந்துள்ளனர்.



