இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உத்தியோக பூர்வ இல்லத்தில் சடலமாக மீட்பு!
#SriLanka
#France
Mayoorikka
1 year ago

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராஜகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



