கிரிக்கெட்டை மோசமாக விமர்சிக்கும் சமூக ஊடக கும்பலுக்கு எதிராக சட்டநவடிக்கை!

சில இலத்திரனியல் ஊடகங்களையும் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டை நாசகரமான முறையில் தாக்கும் சமூக ஊடக கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது கோல்ஃப் அகாடமியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (26) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பல சமூக ஊடகங்கள் மீண்டும் கிரிக்கெட்டை கொச்சைப்படுத்தத் தயாராகிவிட்டன. இன்று பலரும் அறியாதது என்னவென்றால், இந்த தம்புள்ளை சம்பவத்தின் காரணமாக என்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான்தான் 2019 ஆம் ஆண்டு விளையாட்டு முறைகேடு தடுப்புப் பிரிவை அமைத்தேன். உலகில் வேறெதுவும் இல்லாத ஒரு சட்டம், புதிதாக கொண்டுவரப்பட்ட ஆன் லைன் சட்டத்தின் மூலம், அனைவரின் சமூக ஊடகங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.



