அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொஸ்கொட காவற்துறையினர் நேற்று (26.05) பெந்தர கஹ்பிலியகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!