தென்மேற்கு பருவ மழை மேலும் வலுப்பெறும் என என எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27.05) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றானது 50 முதல் 60 கி.மீற்றர் வரை காற்று வீசக்கூடும்.
நாட்டின்மற்ற பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுகிறது. 30-40 வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



