பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வவுனியா!
#SriLanka
#Vavuniya
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் இன்று (26.05) வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.
வவுனியா பொது வைத்தியசாலை, மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு சென்ற ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகள், பிரதான வீதிகள் என்பவற்றில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கலகம் அடக்கும் பொலிசார், நீர் விசிறும் வாகனம் என்பனவும் தயார் நிலையில் விடப்பட்டிருந்தன.