வங்காள விரிகுடாவில் உருமாறிய சூறாவளி : இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ரிமால் சூறாவளி காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் பலத்த மழை பெய்யக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ரிமால் சூறாவளி இன்று (26) காலை வேளையில் சந்தா சூறாவளியாக உருவெடுத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.