ஐஸ், போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#drugs
#Smuggling
Prasu
1 year ago
மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் 360 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 200 போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மஹியங்கனை தொடம்வத்த பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருப்பதாகவும் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் முகவரை நியமித்து ஐஸ் போதைப்பொருள் கொள்வனவு செய்பவர்கள் போன்று களத்தில் இறங்கி, சுற்றிவளைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.