ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதனிடையே, நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் இருப்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நால்வர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்படி, சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர், 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்றும், அவர் தெமட்டகொட பகுதியில் வசிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் 071-8591753 அல்லது நிலைய கட்டளைத் தளபதி 071-8591774 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்குபவரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!