தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திட்டமிடும் தமிழ்த்தேசிய கூட்டணி!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சிறப்பு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (25.05) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், ரெலோ கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க கட்சியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அடுத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதாக கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருக்கின்றோம்.
சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர். யுத்தம் முடிந்து பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றம். வருகின்ற ஜனாதிபதிகளும் பாராமுகமாக இருக்கின்றனர்.
சிங்கள தலைவர்களும் வெளிநாடுகளும் புரிந்து கொள்வதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு ஏற்கனவே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கிய வேலைத்திட்டங்களையே திறந்து வைக்கின்றார்.ஆனால் தமிழ் மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வு தேர்தலை வருகின்ற நிலையில் வாக்கை பெறும் நோக்கிலும் வருகை தந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.



