கிளிநொச்சியில் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைத்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#Kilinochchi
#land
Mayoorikka
1 year ago

குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 1000 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி கொப்பங், நாடாளுமன்ற உறுப்பினர்களான MA சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண ஆளுனர் P H M சார்ள்ஸ், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



