சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு

#SriLanka
Mayoorikka
1 year ago
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு

சிவனொளிபாதமலையின் பருவகால யாத்திரை நேற்றுடன் நிறைவு பெற்றது. சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தையும் மற்றும் பூஜைப் பொருட்களையும் புனித விக்கிரங்கள் அனைத்தும் 24.05.2024 நேற்று நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு வரப்பட்டது.

 மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜைப் பொருட்கள் புனித விக்கிரங்களை 25.05.2024 இன்று காலை 8 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்படும்.

 நோட்டன் லக்ஸபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்படும். 

 அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!