மனித உயிருக்கு ஆபத்தாக மாறும் உணவுகள் - தமிழர் பகுதியில் நடந்த மோசமான சம்பவம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மனித உயிருக்கு ஆபத்தாக மாறும் உணவுகள் - தமிழர் பகுதியில் நடந்த மோசமான சம்பவம்!

அண்மைக்காலமாக நாடாளவிய ரீதியில் மனிதர்களுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்கள் உணவுகள் விநியோகம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

அதற்கமைய யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள பேக்கரி ஒன்றில் கொள்வனவு செய்த ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நேற்று (24.05) மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார். 

உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது. 

 இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.  

இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொதுமக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!