சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் ரணில்! வடக்கு ஆளுநர் புகழாரம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் ரணில்! வடக்கு ஆளுநர் புகழாரம்

நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்து சவால்களை தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றி அமைத்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ர்ஸ் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இன்றி நாடு இருளுக்குள் கிடந்த போது, தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டார். 

பல சவால்களை தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை மாற்றி அமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!