நெடுந்தீவு கடற்போக்குவரத்து இடம்பெறமாட்டாது!
#SriLanka
#Ship
Mayoorikka
1 year ago
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.