கொரிய மொழி புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

#Tamilnews #sri lanka tamil news #Examination
Dhushanthini K
1 year ago
கொரிய மொழி புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகள் தொடர்பில் நடைபெற்ற கொரிய மொழி புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.  

3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  

இந்தப் பரீட்சைக்கு 3,580 விண்ணப்பதாரர்கள் குழு தோற்றியிருந்ததுடன், மொத்தப் பரீட்சார்த்திகளில் 95.6 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.  

இத்தேர்வின் முடிவுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே 27ஆம் திகதி வெளியிடப்படும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மே 28ஆம் திகதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், குடிவரவு வள நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் ஜூன் 06, 07 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்தப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!