வீதியில் பயணித்த மோட்டார் சைக்களில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து : ஒருவர் பலி!

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய யுவதி ஆபத்தான நிலையில் ஹலவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வில்பொத்த பகுதியில் இன்று (23.05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வில்பொத்த முந்தலம தேவால ஹண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமிகள் இருவரும் வில்பொத்த பகுதியிலிருந்து ஹலவத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அதிகளவிலான விபத்துக்கள் பதிவாகி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



