மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை -மீன்பிடி நடவடிக்கை பாதிப்பு

#SriLanka #Mannar #weather #Fisherman
Mayoorikka
1 year ago
மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை -மீன்பிடி நடவடிக்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது.

 இன்றைய தினம் வியாழக்கிழமை வீசி வரும் கடும் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர். குறிப்பாக தாழ்வுபாடு, செளத்பார்,பேசாலை,பள்ளிமுனை ஆகிய கிராம மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.

images/content-image/2024/05/1716448471.jpg

 வீசி வரும் அதிக காற்று காரணமாக கடல் அலைகளும் அதிகம் காணப்படுவதனால் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வள்ளங்கள் வலைகள் உட்பட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.

images/content-image/2024/05/1716448488.jpg

 அதே நேரம் காற்றின் வேகம் காரணமாக கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மீனவர் வாடிகளும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/05/1716448505.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!