சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்! வெசாக் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்! வெசாக் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.

 உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் கொண்டாடுகின்றனர்.

 "சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்" என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காகப் புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 "சப்பத்த சம்மானசோ" அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் ஒரு நாடாக அதை நடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப்படும் இந்நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதற்குப் புத்தரின் போதனைகள் வழிகாட்டும்.

 விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மனவளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான 'மனிதனை' உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும் சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!