சீனாவுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்! ஜனாதிபதி

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் பத்தரமுல்ல அக்குரேகொட, பாதுகாப்பு அமைச்சு வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில். நாட்டைப் பொறுப்பேற்ற பின், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருந்தது. அத்துடன் எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்தது. போரின் போது, “போரை இழுத்தடிப்பது நல்லதல்ல, அதை தந்திரமாக முடிக்க வேண்டும்.
போரிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் அதற்கேற்ப செயல்பட வேண்டும். நமது நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அந்தக் குழுவும் சீனாவும் எங்களின் முன்மொழிவுகளை ஏற்கத் தயாராக உள்ளன. சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்பிறகு அந்த நாடுகளுடன் தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றார்.



