சீனாவின் உலருணவுப் பொருட்களை கடற்றொழில் சங்கங்களூடாக கையளிக்கவும்!

#SriLanka #China #Fisherman
Mayoorikka
1 year ago
சீனாவின்  உலருணவுப் பொருட்களை கடற்றொழில் சங்கங்களூடாக கையளிக்கவும்!

சீனாவில் இருந்து எடுத்துவரப்படும் மீனவர்களுக்கான உலருணவுப் பொருட்களை கடற்றொழில் சங்கங்களூடாக கையளிக்குமாறு யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சமாசம் கேட்டுக் கொண்டுள்ளது.

 யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சமாசம் ஊடக சந்திப்பை நடாத்தியது. இதன்போதே யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் செ.நற்குணம் இவ்வாறு தெரிவித்தார்.

 சீனாவில் இருந்து வருகை தரும் கப்பல் மூலம் மீனவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் எடுத்து வரப்படுகிறது. அதனைப் பகிர்ந்தளிக்கும் முகமாக அதற்கான விண்ணப்பங்களை கடற்றொழில் சங்கங்களூடாக கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 இதேவேளை இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இடம்பெறுகிறது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், அரசு உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை. 

அண்மையில் இந்தியாவில் கைதாகிய வடமராட்சி மீனவர்கள் என்பதில் உண்மையில்லை. அவர்கள் வெளிமாவட்ட மீனவர்கள், அவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதில் எமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!