கொழும்பு – பொரளை பகுதியில் சரிந்து வீழ்ந்த பாரிய மரம்!
#SriLanka
#Colombo
#Rain
Lanka4
1 year ago

கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் பாரிய மரமொன்று இன்று காலை சரிந்து வீழ்ந்துள்ளது.
மரம் சரிந்து வீழ்ந்தமையினால், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதில் வீதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் விளம்பரப் பலகை சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவரும் பாதிக்கப்படவில்லை. அருகிலிருந்த சில கடைகளின் மேற்கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, பலத்த காற்றினால் நாடளாவிய ரீதியில் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.



