இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளம் : நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுகங்கையின் குடா கங்கை உப வடிநிலம் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் புளத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்த கண்டி பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அடுத்த 48 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா வடிநிலத்தின் நீர்மட்டம் உயரும் நிலையில், திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் 08 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.



