பல கோடி ரூபாய் பெறுமதியான நீல தூணா வலையில் சிக்கியது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பல கோடி ரூபாய் பெறுமதியான நீல தூணா வலையில் சிக்கியது!

49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது.  

காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன் சிக்கியுள்ளது.  

பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.

கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிருவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!