காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்க நிதி வழங்க தயார்! ஜனாதிபதி

#SriLanka
Mayoorikka
1 year ago
காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்க நிதி வழங்க தயார்! ஜனாதிபதி

10 வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) மாநாட்டில் உரையாற்றினார்.

 உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், உலகளாவிய வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க தயங்குவதாக 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருப்பதால், அந்த இலாபத்தின் மீது, காலநிலை மாற்ற நிதியத்திற்காக 10% வரி விதிக்கும் யோசனையை இலங்கை முன்தொழிந்தருப்பதாக 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேசியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 18 ஆம் திகதி பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!