ஐஸ் போதைப் பொருட்கள் சூட்சுமமாக விற்பனை-24 வயது சந்தேக நபரிடம் விசாரணை

#SriLanka
Mayoorikka
1 year ago
ஐஸ் போதைப் பொருட்கள்   சூட்சுமமாக விற்பனை-24 வயது சந்தேக நபரிடம் விசாரணை

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் தொடர்பில் தகவல் ஒன்றின் அடிப்படையில் சனிக்கிழமை(18) இரவு பெரிய நீலாவணை பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

 இதன் போது குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் 24 வயதுடைய குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 மேலும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!