சீரற்ற வானிலையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சீரற்ற வானிலையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

நிலவும் காலநிலை காரணமாக 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.  

அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவரகம்பலத்த பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக காயமடைந்த இருவர்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, கொடகவெல மற்றும் பலாங்கொட ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும், பலத்த காற்று காரணமாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார். 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 8,000 பேரும், திருகோணமலையில் 1,334 பேரும், கிளிநொச்சியில் 946 பேரும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியரத்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!