சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை புதிய அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மீதமுள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவிற்கு அனுப்பப்படுவார்கள்.  அதில் இருந்து புதிய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் செயல்பாடுகளை நடத்துவதற்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து தனித்தனியாக கூட்டு முயற்சியாக நடத்துவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  மற்றும் எதிர்கால செயற்பாடுகளுக்காக மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய எண்ணெய் தாங்கி வளாகத்தை விஸ்தரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!