சர்வதேச மன்னிப்பு சபை தலைவரின் இலங்கை விஜயம் : இராணுவ முகாம்கள் அகற்றம்!

சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி இலங்கைக்கு வருகை தந்ததை அடுத்து ஏ 9 வீதியில் இருந்த அனைத்து ராணுவ முகாம்களும் அகற்றப்பட்டு உள்ளமை அவதானிக்க முடிகின்றது.
கடந்த கொரோனா காலத்தில் ஏ9 வீதியிலும் வடக்கின் ஏனைய பல வீதிகளிலும் அமைக்கப்பட்டு இருந்த இராணுவ முகாம்கள் மக்களின் பிரயாணங்களுக்கு இடையூறான வகையில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் தலைவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக இந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் அவர்களுடைய பிரதான இராணுவ தளங்களுக்கு அனுப்பப்பட்டதோடு இராணுவ முகாம்களாக இருந்த கொட்டகைகளும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களாக வீதியில் ராணுவத்தினர் உடைய நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



