07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றும் (19.05) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) அதிகாலை 03 மணி முதல் நாளை (20) அதிகாலை 03 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் ஏனைய 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு ஆகிய 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கட்டம் 1 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.