மன்னாரில் புதையல் தோண்ட முற்பட்ட ஏழுபேர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மன்னாரில் புதையல் தோண்ட முற்பட்ட ஏழுபேர் கைது!

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 7 பேர் நேற்று (18.05) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இதன் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி என தெரிய வந்துள்ளது. ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!