Forbes சஞ்சிகையில் இடம்பிடித்த இலங்கை பெண்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கை நடிகை தினரா புஞ்சிஹேவா மதிப்புமிக்க Forbes சஞ்சிகையில் இடம்பிடித்துள்ளார்.
29 வயதான தினரா புஞ்சிஹேவா 2018 ஆம் ஆண்டு தனது சொந்த குறும்படமான மாலாவை எழுதி, நடித்து, இயக்கியதன் மூலம் இலங்கைத் திரையுலகில் பிரபலமானவராக அறியப்படுகிறார். அதன் பிறகு, அவர் மேலும் நான்கு படங்களில் நடித்துள்ளார்.
லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புஞ்சிஹேவா, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை நாடகம் மற்றும் நடிப்புக்கு அறிமுகப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனமான புஞ்சி ஆக்டர்ஸை நிறுவியதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.



