13 வயது சிறுவனுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களால் நேர்ந்தக் கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவனின் காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது ஒரு துஷ்பிரயோக சம்பவம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.