சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

#Corona Virus #people #Singapore
Prasu
2 years ago
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கோவிட் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பேசுகையில், நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது.

இந்நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொலாத பட்சத்தில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

 மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4