இரு தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து : இருவரின் நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (18.05) மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்துகுள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலை மற்றும் தோரணகஹபிட்டிய கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ் ஒன்றின் சாரதி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்றைய நோயாளி பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



