வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்ட சலசலப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்ட சலசலப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் குறித்த நிகழ்வு தொடர்பில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.  

வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.  

இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  

images/content-image/1716040775.jpg

இதனையடுத்து நிகழ்வு ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களின் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். 

இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் தெரிவித்து முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மக்கள் மழை பெய்யத் தொடங்கியதும் மழையில் நனைந்து கொண்டிருந்த போது உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டு மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர். 

இதனையடுத்து அதிதிகளான மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந் நிகழ்வுக்கு பொதுமக்கள் பல பேருந்துகளில் ஏற்றிவரப்பட்டிருந்ததுடன் இராணுவ புலனாய்வாளர்களும் மும்முரமாக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!