இலங்கையின் பல பகுதிளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் பல பகுதிளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை, ரம்புக்கன பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலக பிரிவுக்கு எச்சரிக்கை நிலை 2 இன் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது. 

பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அபாய பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18) மாலை வெளியிடப்படும். நாளை (19) மாலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!