இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05) இடம்பெற்றது.  

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.  

images/content-image/1716035210.jpg

இந்நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர், முன்னாள் பிரதே சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

இதன்போது, பொது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த மக்களிற்கு ஆத்மசாந்தி பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!