நாடு முழுவதும் சீரற்ற வானிலை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாடு முழுவதும் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில் மலையக பகுதிகளில் பனிமூட்டமான வானிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு ஹப்புத்தளை பொலிஸார் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



