தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: முள்ளிவாய்க்காலில் சர்வதேச மன்னிப்புச் சபை செயலாளர் நாயகம்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றையதினம்(18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமார்ட் (Agnès Callamard) கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூவி வணங்கினார்.
அக்னெஸ் கலமார்ட் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
அதற்குரிய விசாரணைகளை நடாத்துவதற்கான படிநிலைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் மக்களின் பேரெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



