வலி மிகுந்த வரலாற்றின் சாட்சியான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! கண்ணீரோடு அனுஷ்டித்த பெருந்திரளான மக்கள்
#SriLanka
#Mullaitivu
#Mullivaikkal
Mayoorikka
1 year ago
இறுதிப் போரிலே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 18 நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களால் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.


15ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் இறுதிப்போரில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகின்றனர்.




