பலநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்!

பல நாள் மீன்பிடி படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மீனவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தேவைக்காக 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
பல நாள் மீன்பிடிக் கப்பல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக அவ்வழியாகச் சென்ற கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நெடவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒலுவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார். ஒருவர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் மற்ற இருவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றுமொரு மீன்பிடி படகின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



