முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று இன்றுடன் (18.05) 15 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு பதிவி உயர்வு வழங்கி கௌரவித்துள்ளது.
கடற்படை வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அறிவிப்பின்படி, 15வது போர் மாவீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைத் தளபதி மற்றும் சிறிலங்கா ஜனாதிபதியின் ஒப்புதலுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 3,146 மூத்த மற்றும் இளைய மாலுமிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
சுமார் 30 வருடங்களாக இந்த நாட்டில் தலைதூக்கிய பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் வெற்றியடையச் செய்வதற்கும் ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வீரவீரர்கள் உயிர் தியாகம் செய்து ஆற்றிய ஈடுசெய்ய முடியாத பங்களிப்பு” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



