வவுனியாவில் உண்மை நல்லிணக்க பிரதிநிதிகளை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago

வவுனியா உண்மை மற்றும் நல்லிணக்க மன்ற பிரதிநிதிகளை வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
வவுனியா தவசிகுளத்தில் உள்ள ஓர்கான் நிறுவன கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் லண்டனை சேர்ந்த மனித உரிமை மற்றும் நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்க முரண்பாடுகள் அவற்றை தீர்ப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.



