பிரித்தானியாவில் முதன் முதலில் நகர மேயராக தெரிவாகிய இலங்கைத் தமிழர்!

#SriLanka #Governor #Britain
Mayoorikka
1 year ago
பிரித்தானியாவில் முதன் முதலில்  நகர மேயராக தெரிவாகிய இலங்கைத் தமிழர்!

பிரித்தானியாவிலுள்ள நகரமொன்றின் புதிய மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ இளவழகன் என்பவர் இப்ஸ்விச் மாநகராட்சியின் வருடாந்த கூட்டத்தில் அதிகவாக்குகளை பெற்று ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்" என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.

 வேட்புமனுவை முன்மொழிந்த நகராட்சி தலைமை ஆளுநர் நீல் மெக்டொனால்ட் , தான் பதவியில் இருக்கும் ஆண்டில் பொதுத் தேர்தல் முடிவை இளங்கோ இளவழகன் அறிவிப்பார் என அறிவித்துள்ளார்.

 இந்நிலையில், புதிய மேயராக இளங்கோ இளவழகன் நியமிக்கப்பட்டமைக்கு அங்குள்ள தமிழ் சமூகம் வாழ்த்து தெரிவித்து நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!